April 6, 2015

வரலாற்றில் தகடூர் நாடு

தகடூர் நாடு:-

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். இந்த சந்தேகங்களை எப்படி நாம் முடிவுக்கு கொண்டுவருவது என்றால் தற்போதைய சான்றுகளை வைத்து முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரை.

தகடூர் நாடு சங்ககாலத்தில் அதியர் மரபினரால் ஆளப்பட்டு வந்ததை அனைவரும் அறிந்ததே. தகடூர் நாடு கொங்கு நாட்டில் அடங்கியதா, அன்றித் தனி நாடாக இருந்ததா என பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதற்கான ஆய்வில் கிடைத்ததை கீழே தரப்பட்டுள்ளன. 


தருமபுரி மாவட்டத்தின் எல்லையில் பெரும்பாலை உள்ளது. கொங்கு நாட்டின் நாட்டின் எல்லையை குறிக்கும் கொங்கு மண்டல சதகம், கீழ் கண்ட பாடலைச் சுட்டுகிறது. 

கொங்கு மண்டல சதகதம்:-


 வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு 
 குடக்குப் பொறுப்பு வெள்ளிக் குன்று-கிடக்கும் 
 கழித்தண்டலை மேவு காவிரி சூழ் நாட்டுக் 
 குளிதண்டலையளவு கொங்கு 



கொங்கு மண்டலத்தின் வட எல்லையாக கூறப்படும் பெரும்பாலை" என்பது இன்றைய தருமபுரி மாவட்டத்தின் தொப்பூரை அடுத்துள்ள பெரும்பாலை என்றால் தகடூர் நாடு, கொங்கு நாட்டிலிருந்து முற்றிலும் வேறுபாடானது.

இங்கு வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டது. இதன் காலம் கி.பி. 300-600 எனலாம். 



தகடூர் நாட்டின் வரைபடம்:-




கொங்கு நாட்டின் வட எல்லையான “பெரும்பாலை”:-




சங்ககால தமிழக வரைபடம்:-





"பெரும்பாலை கொங்கு நாட்டின் வட எல்லை" என மேலும் இரண்டு பாடல்களில் குறிக்கப்படுகிறது. 
புலவர்.குழந்தை வட எல்லையில் அதியமான் நாடு இருந்தது என குறிபிடுகிறார். 



"கே.வி. சுப்ரமணிய ஐயர் "தொப்பை ஆறு" அல்லது "வேப்பாடி ஆறு" வட எல்லையாக இருந்தது என்றும் இந்த ஆற்றுக்கு வடக்கே அதியமான் நாடு இருந்தது என்றும் கூறியுள்ளார். 

திரு.கே.எஸ். வைத்தியநாதன் அவர்கள் மேல் கூறிய கருத்து இரண்டையும் ஏற்கலாம் என கூறியுள்ளார்.

தகடூரை தலைநகராக கொண்டு பல அரசர்கள் ஆண்டுள்ளார்கள், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம். தகடூரில் அடங்கியுள்ள நாடுகளை கீழே காண்போம்.

நாட்டுப்பிரிவு:-


தகடூர் நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளை கொண்டு பார்க்கும் போது தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம் என்பது போல் இல்லாமல் தனி நாடாக இருந்துள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை மிகப்பெரிய 5 நாடுகளாக இருந்துள்ளது, இந்த 5 நாடுகளின் தலைநகரம் “தகடூர்”. இதில் புறமலை நாடும், கோவூர் நாடும் சங்க காலம் முதலே மிகச்சிறப்பாக இருந்துள்ளது.

  • புறமலை நாடு
  • கோவூர் நாடு
  • மேல்(மீ) கொன்றை நாடு
  • மேல்(மீ) வேணாடு
  • கங்க நாடு
  • கோயிலூர் நாடு
  • வேளாள நாடு
  • தாயனூர் நாடு
  • வேல்கவி நாடு
  • எயில் நாடு
  • மன்ன நாடு
  • முரசு நாடு
  • கடத்தூர் நாடு
  • அலை மலை நாடு
  • வல்லவரையர் நாடு
  • புளிகரை நாடு
  • பெரிய நாடு
  • மசாந்தி நாடு தென்கூற்று நாடு


கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் “பற்று மற்றும் சீர்மை” என புதிய பிரிவையும் கொண்டது தகடூர் நாடு.

கால ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவாறு தகடூர் நாட்டின் பெயரையும் அப்போது ஆண்ட மன்னர்கள் மாற்றியுள்ளர்கள்.

  • தகடூர் நாடு (சங்க கால அதியர்)
  • நுளம்பபாடி
  • நிகரிலி சோழ மண்டலம்
  • முடிகொண்ட சோழ மண்டலம்
  • தகடூர்
  • தருமபுரி மாவட்டம் (2௦௦4 க்கு பின் கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டது)




கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் இருந்து மழ நாட்டின் எல்லைகள் சுமார் 180கி.மீ என தெரியவருகிறது. தமிழக வரலாற்றுக்குத் தனித்தொரு புகழைத் தேடித்தந்துள்ளது தகடூர். பண்டைய தகடூரே தற்போது தருமபுரி என்றழைக்கின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கூட இதன் பெயர் தகடூர் தான். சுமார் 2000 ஆண்டுகளாக வழங்கி வந்த பெயர். தகடூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது “அதியமான் நெடுமான் அஞ்சி”. இவ்வூரை தலைநகராக கொண்டு ஆண்டவர். அதியனை போற்றி புகழ்ந்து பாடிய அவ்வையார் அதியனின் சபையை அலங்கரித்தார்.தித்திக்கும் கரும்பை முதன் முதலில் பயிர் செய்ய கண்டுபிடித்தவன் அதியமான்.

தகடூர் நாட்டில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுகளில் தகடூர் நாடு என்றே உள்ளது (தகடூர் நாட்டுத் தகடூர்), தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 240 கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு கூட “கொங்கு” என்ற பெயருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றுள்ள சில மக்கள் இதை கொங்கு நாடு/கொங்கு மண்டலம் என்றழைக்கின்றனர். தகடூர் நாட்டில் வாழும் சில பாமர மக்களும் தகடூர் என்ற வராலாற்று சிறப்பு மிக்க பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றனர்.

தகடூர் என்றாலே இந்த நாட்டின் பூர்வ குடி மக்களான “மழவர்கள்” வாழ்ந்த பூமி. கொங்கு நாட்டிற்கும் தகடூர் நாட்டிற்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் உண்டு.

தமிழகத்திலேயே எங்கும் காணப்படாத நடுகல் வழிபாடு என்பது தகடூர் நாட்டில் அதிகம். இவ்வாறு வழிபாடு, மொழி, மக்களின் கலாச்சாரம் அனைத்திலும் கொங்கு நாட்டிலிருந்து வேறுபட்டவர்கள் இந்த தகடூர் நாட்டு மக்கள்.

நடுகல்லை வழிபடும் குப்புசெட்டிப்பட்டி மற்றும் சிறுகலூர் கிராமத்தினர். 

இப்படி நமக்கென தனி நாடாக இருந்த நம் மாவட்டத்தை(தருமபுரி,கிருஷ்ணகிரி) கொங்கு நாடாக கூறுகின்றனர். கிடைத்த பல தகவல்களை வைத்து பார்க்கும் போது இது ஒரு தனி நாடாக இருந்துள்ளது.

மேற்கண்ட ஆய்வில் இருந்து பார்க்கும் போது தகடூர் நாடு என்பது சங்க காலம் முதல் இன்றுவரை தனி நாடே அது எந்த நாட்டுடன் (கொங்கு நாடு) சேர்ந்தது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது

********************************************************************************************************************************************************

4 comments:

  1. Enga thgadoor da!!!! Vanniyar NAdu

    ReplyDelete
    Replies
    1. சங்ககால கொங்கு நாட்டின் எல்லை கே ஜி எஃப் வரை உள்ளது

      Delete
  2. தகவல் மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி.. தகடூர் நாடு என்றும் தனித்துவமான அன்பையும், தர்மத்தையும் ஒரு சேர கொண்ட மலையமான்கள், வன்னியர் மக்கள் வாழும் நாடு..

    ReplyDelete
    Replies
    1. அதியமான் இனத்திற்கும் வன்னியர்க்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை

      Delete